இளவரசர் முடிசூடுவதற்கு முதல் நாள் இரவு...
மன்னர் இறந்ததிலிருத்து மகாராணி மந்திராயினி தேவி அவர் அறையை விட்டு வரவே இல்லை. யாரிடமும் பேசவே இல்லை. உணவு உண்ணாத காரணத்தால் அவர் உடல்நிலையும் மோசமாக ஆகியிருந்தது. அரண்மனை மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவர் உடல்நிலையைச் சரிசெய்ய முடியவில்லை. பலர் அவருக்குப் பித்துப் பிடித்துவிட்டது என்றனர். சிலர் யாரோ மன்னருக்கும் மகாராணிக்கும் செய்வினை வைத்துவிட்டதாகக் கூறினார்கள். மந்திராயினி மகாராணியானதே பெரிய அதிர்ஷ்டம். மந்திராயினியின் தந்தை மகுடாதிபன் காஞ்சிபுரத்தில் அவர் காலத்தில் மிகப்பெரிய வணிகர். ஜாவா தீவுகளில் இருந்து முத்துக்களும் அரேபியாவில் இருந்து கலைப்பொருள்களும் சீனாவின் பட்டுத்துணிகள் என்று அனைத்தையும் கப்பல்கள் மூலம் கொண்டு வந்து காஞ்சிபுரத்தில் நிறைத்தார் மகுடாதிபன். சிம்மவிஷ்ணு மன்னராக இருந்த காலத்தில் ராஜ்யத்திற்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து அரண்மனையை அலங்கரித்தார் மகுடாதிபன். அப்படியொரு நாள் சிம்மவிஷ்ணுவிடம் சீனத்து பட்டுகளை விற்க வந்தபோது கூடவே மகள் மந்திராயினியை அழைத்து வந்தார். மந்திராயினியின் அழகில் மயங்கிய சிம்மவிஷ்ணு உடனே திருமணம் முடிக்க விருப்பம் தெரிவித்தார். மகுடாதிபனும் மன்னர் ஏதோ விளையாட்டாய் கூறுகிறார் என்று நினைத்து சிரிக்க, ஆனால் மன்னர் தன் விருப்பத்தை உண்மை என்கிறார். பின்னர் அடுத்த மூன்று தினங்களில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அந்தத் திருமணத்தில் காஞ்சி நகரம் மிளர்ந்ததை எப்படி விவரிப்பது. அரண்மனையின் மிக உயரமான மதில் சுவற்றின்மீது அடுக்கப்பட்டிருந்த அகல் விளக்குகளின் ஒளி கடலில் பிரதிபலித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட அந்தத் திருமணம் முடிந்து மந்திராயினி அரண்மையில் மகாராணியாக இருக்க மிகுந்த கூச்சப்பட்டாள். ஒரு பட்டு வியாபாரியின் மகளாய் இருந்த அவளுக்கு அரியணையில் அமர்ந்து கட்டளைகள் சொல்வது வெட்கமாக இருந்தது. நாளடைவில் அந்த வெட்கம் விவேகமானது. அரசின் ராஜ்ய காரியங்களில் சிம்மவிஷ்ணு மந்திராயினியின் கருத்தை கேட்க ஆரம்பித்தார். அவரின் புத்தி கூர்மையைக் கண்டு காஞ்சி நகரே வியந்தது. அத்தோடு நிற்காத மந்திராயினி போர் பயிற்சிகளிலும் குதிரை வில்வித்தை வாள் பயிற்சி என்று அனைத்திலும் தன்னைப் பலப்படுத்திக்கொண்டார்.
"அம்மா"...."அம்மா"..."அம்மா..."
இளவரசர் மகேந்திரன் சுவற்றின் பக்கம் திரும்பி அமர்ந்திருந்த தன் தாய் மந்திராயினியை கூப்பிட்டு அவள் திரும்பாததால் சத்தமாகக் கத்த அவள் திரும்பினாள். அழுது அவள் முகம் வீங்கியிருந்தது. தோடுகள் பிரதிபலிக்கும் ஒளியை தாங்கும் கன்னங்கள் வற்றிப்போயிருந்தது. மகேந்திரனை பார்த்ததும் அவனைக் கட்டிக்கொண்டு விசும்பினாள். மகேந்திரன் தன் தாயின் மடியில் அமர்ந்துக்கொண்டு அவள் கண்களில் புரண்டோடும் கண்ணீரை துடைத்தான்.
"ஏன் அம்மா அழுகிறீர்கள்...நான் தான் மன்னர் ஆகப்போகிறேனே...எனக்காகச் சிரிக்க மாட்டீர்களா அம்மா?"
"நீ அரசன் ஆவது தான் எனக்குப் பயமாக இருக்கிறது மகேந்திரா. நமக்கு இந்த ராஜ்ஜியம் எதுவும் தேவை இல்லை என்று சொல்லும் நிலை எப்போது வரும் என்று நான் காத்துக்கொண்டிருக்கிறேன். எங்கே உன் தந்தையை அழித்தது போல உன்னையும் இந்தச் சூழ்ச்சிகள் அழித்து விடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது"
"என்ன அம்மா சொல்கிறீர்கள்? தந்தையை யார் அழித்தார்கள்? எனக்கு ஒன்னும் புரியவில்லையே அம்மா"
"உனக்கு இந்தச் சூழ்ச்சிகள் புரியாது மகேந்திரா...எங்கே இது எல்லாம் தெரிந்துக்கொண்டால் அந்தச் சண்டாளன் உன்னையும் கொன்று விடுவானோ என்று எனக்கு அச்சமாக உள்ளது. இது அனைத்தும் என்னுடனே இருக்கட்டும். என் உயிரை கொடுத்தாவது உன் உயிரை நான் காப்பாற்றுவேன் மகேந்திரா..."
"அம்மா...நான் நாளை விடிந்தால் அரசானாகப்போகிறவன். என்னை யாராலும் எதும் செய்ய முடியாது அம்மா. பயப்படாதீர்கள்" என்று இளவரசர் சொல்லி முடிக்க, அந்த அறையின் சன்னல் வழியாக ஒரு உருவம் உள்ளே நுழைந்தது. கருப்பான ஒரு துணியை உடல் முழுக்கச் சுற்றிய அந்த உருவம் மெதுவாக மந்திராயினியையும் மகேந்திரன் பக்கமும் வந்தது. அந்த உருவம் கையில் வைத்திருந்த நீண்ட வாள் பிரதிபலித்த ஒளி மந்திராயினியின் கண்களைக் கூச அவள் திடுக்கிட்டாள்.

அதே நேரம்…
"தாத்தா இது போலவே எனக்கும் ஒரு குதிரை செய்து தர மாட்டார்களா?" என்றான் முத்துக்குமரன்.
"முத்துக்குமாரா நான் இன்று சொல்வதை நீ வாழ்க்கை முழுவதும் மறக்க கூடாது. இதோ இங்கு இருக்கும் இந்தத் தங்க குதிரையை நான் நம் இளவரசருக்கு நாளை முடிசூட்டுதளில் அளிப்பேன். அதேபோல நீயும் இந்தத் தங்க கலையைக் கற்றுக்கொண்டு அடுத்து வரும் மன்னருக்கு இதே போல ஒரு தங்க குதிரையைச் செய்து கொடுக்க வேண்டும்" என்று தங்ககுமாரர் நீரில் இருந்து கழுவி எடுத்த அந்தத் தங்க குதிரை சிலையைக் கையில் வைத்து காட்டினார். நன்றாக ஒளிர்ந்தது. அதை மெதுவாக ஒரு பட்டுத் துணியில் சுற்றினார். ஒரு மண் பானைக்குள் அதை வைத்து, அந்தச் சிலை முழுவதும் மறையும்படி அரிசியை நிரப்பினார். அந்தப் பானையின் வாயை ஒரு பட்டுத் துணியால் மூடி இறுக்கி கட்டி அதை ஒரு அலமாரியில் வைத்தார். அனைத்தையும் முத்துக்குமாரன் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"தாத்தா...அப்போ நான் மன்னராக முடியாதா?" என்றான் முத்துக்குமாரன்
தங்ககுமாரர் பலமாகச் சிரித்தார். பிறகு, "முத்துக்குமாரா, இந்த ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கவும் நம்மை வாழ வைக்கவும் இங்கு இருக்கும் பல்லவ அரசைத் தவிற யாராலும் அதைச் செய்ய முடியாது…உனக்கு ஏன் இந்தத் திடீர் ஆசை ?...வேண்டுமானால் உன் நண்பன் இளவரசர் மகேந்திரரிடம் கேட்டு ராஜ்யத்தின் ஒரு பகுதிக்கு நீ சிற்றசர் ஆகிவிடு..." என்று மீண்டும் பலமாகச் சிரித்தார்.
அந்தச் சமயம் யாரோ கதவை தட்டுவது கேட்டது. கதவு மிக வேகமாகத் தட்டப்பட்டது. உடைந்து விழுவதுபோல இருந்த அந்தக் கதவு உடைந்தே விழுந்தது. இருட்டில் இரண்டு உருவங்கள் வீட்டிற்குள் நுழைந்தன.
2016 – சென்னை
"சார்...என்ன ஆச்சுச் சார்...ரிப்போர்ட்ஸ் வந்துடுச்சா..." உடற்கூறு ஆய்வு அறையினுள் இருக்க முடியாமல் கந்தசாமி வெளியே வந்துவிட, ஆய்வு முடிந்து வெளியே வந்தார் முரளிதரன்.
"இல்லை கந்தசாமி, ரிப்போர்ட்ஸ் வர கொஞ்சம் நாள் ஆகும். ஆனா இப்போதைக்கு ஒரு சில விசயத்தைப் பத்தி டாக்டர்ஸ் சொல்லுறாங்க..."
"என்ன சொல்லுறாங்க சார்...?"
"அவன் நம்ம ஊர் காரன் கிடையாது. வெளிநாட்டுக்காரன். ஐரோப்பால ஏதாவது நாட்டைச் சேர்ந்தவனா இருப்பான்..."
இருவரும் அந்த மருத்துவமனையில இருந்து வெளியே வந்தனர்.
"சார், உங்களுக்கு என்கொயரி இருக்கும்ல..."
"கண்டிப்பா இருக்கும் கந்தசாமி, இவன் யாரு எப்படிச் செத்தானு கேட்பாங்க...ஏன் நான் தான் கொன்னேன்னு கூட எழுதுவாங்க...ஐ வில் வேஸ் இட்...இவன் தனி ஆளு இல்லை கந்தசாமி. ஒரு பெரிய கூட்டமா இருக்கனும். அப்புறம் நமக்குக் கிடைச்ச அந்த நடராஜர் சிலை...அதை பத்தி நோட்டிபிக்கேஷன் போடுங்க...எங்கையாவது காணாம போயிருக்கான்னு தெரிந்த நம்ம லோக்கல் போலீஸுக்கு இந்தக் கேஸ்ல உதவி பண்ணலாம்"
இருவரும் ஜீப்பில் ஏற, ஜீப் துறைமுகத்தை நோக்கி நகர்ந்தது. மருத்துவமனைக்கு வெளியில் இருளில் மறைந்திருந்த ஒரு கார் முரளிதரனும் கந்தசாமியும் சென்றுக் கொண்டிருந்த காரை பின் தொடர ஆரம்பித்தது.

அந்தக் கருப்பு நிற கார் அவர்களைப் பின் தொடர்வதை முரளிதரனோ கந்தசாமியோ கண்டுக்கொள்ளவில்லை. நெரிசல் நிறைந்த நகரின் சாலைகளுக்கு நடுவே கூட அந்தக் கருப்புக் கார் வந்துக்கொண்டே இருந்தது. முரளிதரனின் ஜீப் நகர்புற சாலையில் இருந்து பிரிந்து ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு மணல் சாலைக்குள் நுழைய அந்தக் காரும் பின்னாலேயே வந்தது. அந்தச் சாலையில் இந்த இரண்டு காரை தவிற வேறு எந்தக் கார்களும் இல்லை. கரடுமுரடான அந்தச் சாலையில் இரண்டு கார்களும் குலுங்கி குலுங்கி சென்றுக்கொண்டிருந்தது.
முரளிதரனுக்கு அப்போதுதான் அந்தக் கார் ஒரு வேளை தங்களைப் பின் தொடர்கிறதோ என்ற சந்தேகம் வந்தது.
"கந்தசாமி நமக்குப் பின்னாடி ஒரு கார் வருது பாத்தீங்களா?"
"ஆமா சார் அதுக்கு என்ன...?"
"இந்தக் குறுக்குபாதை பெரிசா யாருக்கும் தெரியாது. சொல்லப்போனா யாரும் வரவே மாட்டாங்க.."
"ஆமா சார்...அப்படின்னா...?"
"எனக்கு என்னவோ இந்தக் கார் நம்மை ஃபாலோ பண்ணி வருதோன்னு ஒரு சந்தேகம்...வாங்க செக் பண்ணலாம்"
இருவரும் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அந்தக் காரை நோக்கி சென்றனர். அந்தக் காரின் விளக்கொளிகளும் அணைந்தது. யாரும் காரை விட்டு இறங்கவில்லை. இருள் நிறைந்த அந்தக் காட்டுப்பாதை சுத்தமாக ஒளிகளற்று இருந்தது. முரளிதரனும் கந்தசாமியும் அந்தக் காரை நெருங்கினர். கந்தசாமி ஒரு டார்ச் லைட்டை அந்தக் காரை நோக்கி அடித்தார். திடீரென்று கார் ஸ்டார்ட் ஆகி பயங்கர வேகத்தில் வந்து கந்தசாமியை இடித்தது. இடித்த வேகத்தில் கந்தசாமி கீழே விழ, கார் அவர் மீது ஏறி வேகமாகச் சென்றது. இந்த அதிவேகமான சம்பவங்கள் எல்லாம் என்ன என்று முரளிதரனுக்குப் புரிவதற்குள் கந்தசாமி கீழே ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரின் ஒரு கை வலிப்பு வந்தது போல இழுத்துக்கொண்டிருந்தது. முரளிதரன் ஓடிச்சென்று அவரைத் தூக்கி காரில் போட்டுக்கொண்டு வேகமாக மருத்துவமனையை நோக்கி விரைந்தார். ஆனால் மருத்துவமனை செல்வதற்குள் அவரின் உயிர் பிரிந்திருந்தது.
-தொடரும்...
Leave your comments on the story below.

தோடுகள் பிரதிபலிக்கும் ஒளியை தாங்கும் கன்னங்கள் வற்றிபோயிருந்தது.... அருமையான வரிகள்....
ReplyDeleteசிவக்குமார்.... ஜெயக்குமார் கல்வெட்டு பற்றி விரைவில் சொல்ல வேண்டும்....
ReplyDelete