அடர்ந்த காடு அதன் இடைவெளிகளில் நிலவின் ஒளியை அங்கங்கு அனுமதித்துக்கொண்டிருந்தது. அந்த இடைவெளிகளில் நிலவு தன்னுடைய அனைத்து சக்தியையும் கொண்டு தனது கதிர்களைப் பாய்வித்துக்கொண்டிருந்தது. சில உயிர்களின் புணர்வுகள் அடுத்தப் பகலுக்கான காத்திருப்பில் இல்லாமல் நீண்ட இரவுகளுக்கான வேண்டுதல்களில் இருந்தன. காடு குளிர்ந்த காற்றுக்கு ஒட்டுமொத்தமாகத் தலையசைத்துக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் யாராக இருந்தாலும் தலைக்கே மேல் ஆட்டம் ஆடும் அந்த நெடிய மரங்களையும் நிலவின் குளிர்ச்சியை ஒளிர்விடும் அதன் இலைகளின் வெளிச்சமும் பயம் ஏற்பட்டுவிடும். ஆனால் அந்தக் காட்டின் புதர்களை உரசிக்கொண்டு ஒரு குதிரையின் கால்கள் சீறிக்கொண்டிருந்தது. அந்தக் குதிரை போகும் வேகத்தில் சில மரக்கிளைகள் உடையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது.

மகாராணி மந்திராயினி நகர் பாதை வழியாக வடவூர் போக வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தார். நகர் பாதை வழியாகச் செல்லும் போது மக்களுக்குத் தெரிந்தால் பெரிய கூட்டம் கூடவும் ஆபத்துகள் அதிகமாக வரவும் வாய்ப்பு உள்ளதாக அவர் கருதினார். அதனால் காட்டு விலங்குகள் அதிகமாக இருக்கும் இந்தக் காட்டுப்பாதையைத் தேர்ந்தெடுத்தார். அந்தக் குதிரை செல்லும் வேகத்தில் அவர் பல்லவ சாம்ராஜ்யத்தின் அடுத்த மன்னரை காப்பாற்ற எவ்வளவு முனைப்பாக உள்ளார் என்பதைக் காட்டியது.
முன்னால் இளவரசர் மந்திராயினி மீது சாய்ந்து தங்ககுதிரை பானையைப் பிடித்துக் கொண்டே நன்றாகத் தூங்கிப்போயிருந்தார். இளவரசர் மகேந்திரனுக்கு நடப்பது பாதிப் புரிந்தும் புரியாதது போல இருந்தது. வரும் வழியெல்லாம் நான் தானே அரசன் நான் ஏன் ஓடி மறைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வந்தான். அசதியும் களைப்பும் அடுத்த நாள் தான் அரசன் ஆகப் போகிறோம் என்ற கலைந்த கனவையும் சுமந்துக்கொண்டிருந்த அந்தப் பிஞ்சு இதயம் பறக்கும் குதிரையின் எதிர்க்காற்றில் உறங்கிப்போனது.
குதிரை ஒரு இடத்தில் களைப்பில் மெதுவாக நின்றது. ஒளியே இல்லாமல் மரங்கள் அந்த இடத்திற்குக் கூரை அமைத்திருந்தன. இன்னும் கொஞ்சம் தூரத்தில் வடவூர் வந்துவிடும். ஆனால் என்ன செய்வது இந்தக் குதிரை களைப்பில் நின்று விட்டதே. சரி என்று மகாராணி குதிரையை ஒரு மரத்தில் கட்டிவிட்டு ஒரு பாறையின் மீது அமர்ந்து இளவரசரை தன் மடியில் போட்டுக்கொண்டார். அந்த இருளில் யாருக்கும் இவர் இங்கே இருக்கிறார் என்று கூட அடையாளம் தெரியப்போவது இல்லை. மகாராணியின் கண்கள் தூக்கத்தில் சுழன்றது.
திடீரென்று யாரோ வருவதுபோல இலைகளின் சலசலப்பு கேட்டது. அது ஒரு பக்கமிருந்து வரவில்லை. மந்திராயினியை சுற்றி அனைத்துத் திசைகளில் இருந்தும் வந்தது. யாரோ அவரை நெருங்கி வருவதுப்போலக் கேட்டது. மந்திராயினி உடனடியாகத் தூங்கிக் கொண்டிருந்த இளவரசரை குதிரையின் மேல் உட்கார வைத்து, குதிரையோடு சேர்த்துக் கட்டினார். மரத்தில் கட்டிய குதிரையை அவிழ்த்துவிட்டார். அவர் ஒரு சத்தம் எழுப்பினால் போதும் குதிரை வடவூரை நோக்கி விரைய ஆரம்பித்துவிடும்.
அந்தச் சலசலப்புச் சத்தம் அதிகமானது. நெருங்கி வந்துவிட்டதுப்போலத் தோன்றியது. மந்திராயினி தன் வாளை எடுத்துக்கொண்டு தயாராக நின்றுக்கொண்டிருந்தார். இருளுக்குள் இருந்து ஒரு குதிரை வந்து நின்றது. நிலவொளியின் ஒற்றைக்கீற்றில் அந்த முகம் மந்திராயினிக்குத் தெரிந்தது. அது படைத்தளபதி சூரியத்தேவர்.
மந்திராயினி கடும்கோபத்தோடு தன் வாளை சுழற்றுக்கொண்டு சூரியத்தேவர் பக்கம் சென்றாள்.
"ராஜ துரோகியே சண்டாளா...உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்" என்று ஓங்கிய தனது வாளை சூரியத்தேவனின் கழுத்தை நோக்கி வீச, சூரியத்தேவர் தன்னுடைய வாளை எடுத்து அந்த வீச்சை தடுத்தான்.
"மகாராணி நான் சொல்வதைக் கேளுங்கள்...என்னை தாக்காதீர்கள்" என்று மந்திராயினியை தட்டிவிட அவள் சற்று பின்வாங்கினாள். மீண்டும் தன் வாளை சூரியத்தேவன் நோக்கி வீச, சூரியத்தேவன் அதைத் தடுத்து தடுத்துத் தள்ளிக்கொண்டே இருந்தான்.
இருவருக்கும் இடையே வாள் சண்டை நடந்துக்கொண்டிருந்தது. மந்திராயினி வாள்வீச்சை சமாளிக்க முடியாமல் சூரியத்தேவனின் வாள் கீழே விழுந்தது. அவன் மண்டியிட்டு அமர்ந்தான். மந்திராயினியின் வாள் அவன் தலையைக் கொய்யத் தயாராக இருந்தது.
"மகாராணி நான் தங்களைக் கொல்வதற்தாக வரவில்லை...நான் ராஜ துரோகியும் இல்லை...தங்களைக் காப்பாற்றவே நான் இங்கு வந்தேன்"
"என்ன நாடகம் ஆடுகிறாய் சூரியத்தேவா? ஒழுங்காக உண்மையை ஒப்புக்கொள். இல்லையேல் உன்னைக் கொன்று விடுவேன்"
"என்னை நீங்கள் கொல்லுங்கள் மகாராணி. இத்தனை பாதுகாப்பு நான் போட்டிருந்தாலும் இந்தச் சாளுக்கியர்களை நம் தேசத்திற்குள் ஊடுருவியதை அறியாமல் இருந்ததற்கு நீங்கள் என்னைக் கொல்லுங்கள் மகாராணி. அந்த நயவஞ்சகன் இத்தனை நாள் நம்முடன் இருந்தும் அவனை அடையாளம் கண்டுகொள்ளாதவனாக இருந்ததற்கு என்னைக் கொல்லுங்கள் மகாராணி....." என்று கூறிக்கொண்டிருக்கும் போதே ஏங்கிருந்தோ வந்த ஏட்டியொன்று மண்டியிட்டுருந்த சூரியத்தேவரின் முதுகில் குத்தி நெஞ்சில் வெளியே வர அவன் தரையில் சாய்ந்தார்.
அந்த ஈட்டி வந்த திசையின் பக்கமிருந்து பல குதிரைகளின் சத்தம் கேட்டது. ஒரு பெரும் படை வருவதாகத் தோன்றியது. மந்திராயினி இளவரசர் தூங்கிக்கொண்டிருந்த குதிரைக்குச் சைகை கொடுக்கத் தயாரானார்.
2016 – வடவூர்
அடர்ந்த வனப்பகுதிக்குள் ஜெயக்குமார் ஓடிக்கொண்டிருந்தான். யாரோ ஒருவர் அவனைப் பின் தொடர்வதுபோல இருந்தது. உடல் முழுவதும் வியர்த்துப்போய் ஒடிக்கொண்டிருந்தபோது ஒரு கல் தடுக்கு கீழே விழ அதற்கு மேல் ஓட முடியாதபடி அடிப்பட்டது. அடிப்பட்ட இடத்தில் வடியும் ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு எழ முடியாமல் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான். பின்னால் துரத்தி வந்த உருவம் அவனை நெருங்கிவிட்டது. அந்த உருவம் இப்போது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஒரு பெண். ஆம் பல வருடங்களுக்கு முன் அவன் சதீஷுடன் பாழடைந்த கோயிலுக்குச் செல்லும்போது அங்குப் பார்த்த சிலையை ஒத்த பெண்தான் அது. அவள் முகம் கலையில் ஒளிர்ந்தாலும் இன்னொரு பக்கம் கோபத்தில் கொதித்தது. எழுந்து நடக்கமுடியாத ஜெயக்குமார் அப்படியே ஊர்ந்து சென்றான். பெரிய வாளை ஜெயக்குமாரின் கழுத்தில் அந்தப் பெண் வைத்தாள்.
"சதீஷை நீ தானே கொன்றாய்?" என்றாள் அந்தப் பெண் மிரட்டும் தொணியில்.
"இல்ல...நான் கொல்லல...சதீஷ நான் கொல்ல...என்ன விட்டுரு..." என்று கெஞ்சினான் ஜெயக்குமார்.
அந்தப் பெண் தன் வாளை ஜெயக்குமாரின் கழுத்தில் வைத்து அழுத்தினாள். அழுத்தியவாறே, இன்னொரு கையை ஜெயக்குமாரின் தோள்பட்டையில் வைத்து தட்டி "சார்...சார்...சார்..." என்றாள். ஜெயக்குமாருக்கு ஒன்றும் புரியவில்லை.
தான் உட்கார்ந்திருந்த மேசையில் அப்படியே தூங்கிப்போன ஜெயக்குமாரை, கதிர் எழுப்பிக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது இது அனைத்துமே கனவு என்று. ஆனால் அந்தப் பெண் அவன் கனவில் பலமுறை வந்திருக்கிறாள். டென்ட்குள் அப்படியே தூங்கிப்போன ஜெயக்குமார் விழித்து ஒரு கொட்டாவியுடன் எழுந்தான். அகழ்வாராய்ச்சி பணியில் பெரிதாக எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அகழ்வாராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கால வரையறை நாளையுடன் முடியப்போவதால் இன்று இரவு மட்டும் முழுவீச்சில் பணி நடந்துக்கொண்டிருந்தது. மணி இரவு பதினொன்று ஆகிக்கொண்டிருந்தது. ஆராய்ச்சியாளர்கள் இறுதிக்கட்ட பணிகளில் இருந்தனர். ஹீலியம் விளக்குள் மின்னியது.
"என்ன கதிர் முடிச்சிட்டிங்களா?" என்றான் ஜெயக்குமார்.
"சார் ஒரு முக்கியமான விசயம் நீங்க வந்து பார்க்கனும்"
"என்ன ஆச்சு கதிர்..."
"நீங்க வந்தே ஆகனும் சார்...சம்திங் இம்பார்டண்ட்"
இருவரும் வெளியே விளக்குகள் எரிந்துக்கொண்டிருந்த பகுதிக்கு செல்ல அங்கே குழிக்குள் இருந்து ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு மண்பானையை எடுத்து வெளியே வைத்தார். ஜெயக்குமாரின் கண்கள் விரிந்தது. கண்ணீர் சுரப்பிகளில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. அது கண்டிப்பாக ஒரு பழங்காலத்து பொருள் தான் என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் ஜெயக்குமாருக்கு அதில் உள்ளே என்ன இருக்கிறது என்றும் தெரிந்திருந்தது.
அதை மெதுவாக வாங்கி ஒரு மேசைமீது வைத்தான் ஜெயக்குமார். அனைவரும் அதைச் சுற்றி நின்றனர். அந்தப் பானையின் வாய் ஒரு துணியால் மூடப்பட்டிருந்தது. நைந்துப்போன அந்தத் துணியைக் கிழியாமல் கழற்றினான் ஜெயக்குமார். உள்ளே கருப்பு நிறத்தில் அரிசி இருந்தது. பல நாட்களாக இருந்த காரணத்தால் அப்படி ஆகியிருக்கும் என்று எல்லாரும் பேசிக்கொண்டனர். கண்டுபிடித்த மகிழ்ச்சியில் எல்லாரும் கைத்தட்டினர். ஆனால் ஜெயக்குமார் மட்டும் அந்தப் பானையையே பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு ஃபோர்செப்ஸ் எடுத்து அந்தப் பானை உள்ளே நுழைத்தான். அரிசிக்கு நடுவே எதுவோ தட்டுப்பட்டதுபோல இருந்தது. அப்படியே அதை இறுக்கிப்பிடித்து மேலே தூக்கினான். கருப்பாய் இருந்த அரிசிக்கு நடுவே இருந்து ஒன்று மிலிரிந்துக்கொண்டே மேலே வந்தது. அங்கு இருந்த மஞ்சள் வண்ண ஹீலியம் லைட்டுகளில் பிரகாசமாக ஒளிர்ந்தது அது. ஜெயக்குமார் தேம்பித் தேம்பி அழ அந்தத் தங்ககுதிரை சிலையை முத்தமிட்டான். எல்லாருக்கும் பயங்கரச் சந்தோசம் அவர்கள் ஏதோ முக்கியமான ஒன்றை கண்டுபிடித்துவிட்டார்கள் என்று. ஜெயக்குமாருக்கு மட்டுமே தெரியும் அந்தத் தங்ககுதிரைக்காகத் தான் இழந்த ஒரு உயிரை.

-தொடரும்
Leave your comments on the story below.

உவமைகள் ��
ReplyDelete