கிராமத்து சாலைகள் கொஞ்சம் கரடு முரடாகத்தான் இருந்தது. ஜல்லிகற்கள் வெளியே துருத்திக்கொண்டு இருந்தன. எங்கே சைக்கிள் டயரை பஞ்சர் செய்துவிடுமோ என்று பயந்து கொண்டே சென்றான். கிராமத்தில் அப்படித்தான். பத்து வருடத்திற்கு முன் போட்ட சாலைகள் புனரமைக்கப்படாமலே இருக்கும். யாருக்கும் அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால் சாலை வருடம் வருடம் போட்டதற்கான கணக்கு மட்டும் அரசு கஜானாவில் காலியாகிக்கொண்டே இருக்கும். தேர்தல் போது மட்டும் ஒப்பனையாக ஒரு படலம் மேலே போடப்பட்டு அக்கறை உள்ளவர்கள் போல காட்டப்படும். எந்தக் கட்சி இருந்தாலும் இது மாறாமல் இருக்கும். அந்த கிராமத்து மக்களே இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மதி சென்ற சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது. சைக்கிள் ஏறி ஏறி தூக்கிப்போட்டது. டயர் வெடித்து விடுவதுபோல இருந்தது. இதற்கு பேசாமல் நெடுஞ்சாலையிலேயே போயிருக்கலாம் என்று அவனுக்கு தோன்றியது. ஆனால் என்ன செய்வது ஊருக்குள் வந்து விட்டாயிற்று, இன்னும் கொஞ்சம் நேரத்தில் சிமெண்ட் சாலை வந்துவிடும் என்று நம்பிக்கையில் ஓட்டினான்.
மதி ஒரு கணக்கோடுதான் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். மொத்தம் ஐம்பத்தி இரண்டு கிலோமீட்டர், பத்து கிலோமீட்டருக்கு ஒரு மணி நேரம் என்பது இலக்காக இருந்தது. அப்படியென்றால் ஐந்து மணி நேரத்தில் குத்தாலம் சென்றுவிடலாம். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு இடத்தில் சைக்கிளை நிறுத்தி கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம் என்று கணக்குப்போட்டிருந்தான்.
சைக்கிள் ஒரு குழிக்குள் இறங்கி ஏறியதில் தடுமாறி ஒரு பக்கமாக சாய்ந்தது. ஆனாலும் மதி அவன் காலை வைத்து தடுத்துவிட்டான். ஆனாலும் சாய்ந்து வேகத்தில் அவனையும் மீறி கீழே சாய்ந்தான். மதி மேல் சைக்கிள் கிடந்தது. அது கிராமத்தின் எல்லைப் பகுதி என்பதால் தூக்கவும் ஆட்கள் இல்லை. மதி அவனே எழுந்து கொண்டு சைக்கிளைத் தூக்கினான். அவனுக்கும் பெரிய அடியில்லை சைக்கிளுக்கும் எதும் ஆகவில்லை. மீண்டும் கூகுள் மேப்ஸ் காட்டிய சாலையிலேயே சென்றான்.
மதியின் கால் முட்டியில் நன்றாக சிராய்த்து ரத்தம் வெளியே வந்துக்கொண்டிருந்தது. உள்ளங்கையைத் தாங்கிக்கொள்ள வைத்தப்போது அதிலும் அடி. இன்னொரு கையில் ஹேண்டில்பார் இடித்ததில் ரத்தக்கட்டு. அம்மா பொளிச் என்று முதுகில் ஒன்று வைத்து வீட்டிற்குள் இழுத்துக்கொண்டு போனார். அவன் நண்பன் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவன் வீட்டுக்கு சென்றான்.அப்போது மதி இரண்டாவது படித்துக்கொண்டிருந்தான். அவனிடம் சைக்கிள் இல்லை. அவன் நண்பன் குமார் வைத்திருந்த சைக்கிளை வாங்கி ஓட்டப்பழகுவான். குமார் சைக்கிளை பின்னாலேயே பிடித்துக்கொண்டு ஓடிவருவான். குமார் விட்டுவிட்டால் மதி கண்டிப்பாக விழுந்துவிடுவான். குமார் நன்றாக ஓட்டுவான். டவுன் வரைக்கும் சைக்கிளிலே போவதாய் சொல்லிக்கொள்வான். ஒருநாள் குமார் மதிக்கு குரங்கு பெடல் செய்து காண்பித்தான்.
'இது என்னடா...இப்படி ஓட்டுற'
'இது கொரங்கு பெடல்'
குமார் மூச்சு வாங்கிக்கொண்டே சைக்கிளை நிறுத்தினான்.
'கொரங்குலாம் இப்படித்தான் ஓட்டுமா?'
'ஆமா, நான் ஒரு நாள் பாத்தேன். ஒரு குரங்கு இப்படித்தான் ஓட்டிச்சு'
'நாம ஏன் இப்படி ஓட்டனும்?'
'கொரங்குல இருந்துதான் மனுசன் வந்தானாம்...'
'அதெக்கு'
'அதான் இப்படி ஓட்டித்தான் சைக்கிள் கத்துக்கனும்னு எங்க ஐயா சொன்னாரு'
'அவரும் இப்படித்தான் கத்துக்கிட்டாரா?'
'ஆமாடா'
'எனக்கும் கத்துகொடுடா....'
'அப்போ எனக்கு ஒரு தேன்னுமுட்டாய் வேணும்'
'சரி வாங்கிக்கலாம்....'
அன்று முழுவதும் இருவரும் குரங்கு பெடில் அடித்தார்கள்.. மதி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டான்.
மதி பேண்டில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு சைக்கிளை எடுத்தான். கூகுள் மேப்ஸ் காட்டிய திசையிலேயே போனான். இடையில் நிறைய வீடுகள் எல்லாம் இருந்தது. எல்லாரும் இவனை அந்நியனாக ஒரு மாதிரி பார்த்தார்கள். நாய்கள் குறைத்தன. ஐந்து கிராமங்களைக் கடக்கையில் பத்து கிலோமீட்டர் கடந்து இருந்தான். ஒரு மரத்தடியில் நின்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் சைக்கிளை எடுத்தான். வெயில் சற்று குறைந்திருந்தது. ஆனாலும் வியர்த்தது எரிச்சலாக இருந்தது. கூகுள் மேப்ஸ் காட்டியபடியே ஒரு சந்தில் நுழைந்தபோது மக்கள் கூட்டமாக நின்று இருந்தனர். சாலை அடைக்கப்பட்டதைப் போல இருந்தது.
-தொடரும்...