"வேணாம் டா. எதுக்கு இந்த தேவையில்லாத வேலை, ஓடுற ஓணான எடுத்து..."
"இங்க ஓணானும் இல்ல...வேட்டியும் இல்ல...இது ஒரு எக்ஸ்பீரியன்ஸ் டா...உனக்கு சொன்னா புரியாது..."
"என்ன பெரிய எக்ஸ்பீரியன்ஸ் மயிறு?"
கோகுல் திட்டுவதை கேட்காமல் மதி பையை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். ஒரே ஒரு செட் ட்ரஸ்தான். ஒரு பெரிய இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டில். ஆனால் அந்த தண்ணீர் பத்தாது என்று அவனுக்கு தோன்றியது. அறையின் மூலையில் கிடந்த ஒரு சணல் கயிறை எடுத்து வைத்துக்கொண்டான். பையை பின்னால் கட்டுவதற்கு பயன்படும் என்று நினைத்துக்கொண்டான். தலை சீவவோ பவுடர் அடிக்கவோ அவனுக்கு நேரமில்லை. மணி மதியம் இரண்டு ஆகிக்கொண்டிருந்தது. இப்போ கிளம்பினால்தான் போய் சேர முடியும். சிதம்பரத்திற்கும் குத்தாலத்திற்குமான இடைவெளியை மனதிற்குள் கணக்குப்போட்டுக்கொண்டான். மீண்டும் கோகுல் குறுக்கிட்டான்.
"கடைசியா சொல்லுறேன்...வேணாம்! உனக்கு என்ன வேணா ஆகலாம் புரியுதா"
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது...ஃபோன்ல ஃபுல் சார்ஞ் இருக்கு, பத்தாததுக்கு இந்த பவர்பேங்க் இருக்கு...நான் குத்தாலம் போய் சேர்ந்துட்டு போன் பண்றேன்"
"உம் மனசுல என்ன பெரிய வீராதி சூரன்னு நினைப்பா...சிதம்பரம் டூ குத்தாலம் ஐம்பத்தி இரண்டு கிலோ மீட்டர்..தெரியுமா"
"தெரியும் தெரியும்...என்ன பண்ணுறது குத்தாலத்துல ஒரு மாசம் இருக்கனும் இது இல்லாம என்னால இருக்க முடியாது...இதுக்கு உயிர் இருக்கு தெரியுமா?"
"போதும்பா உன்னோட புராணம். பாத்துப்போ...மறுபடியும் சொல்லுறேன் பாத்துப்போ..."
மதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை படிப்பில் இறுதியாண்டு படித்து வந்தான். இறுதியாண்டு ப்ராஜெக்ட்டுக்காக அவன் சிதம்பரத்திலுருந்து ஐம்பத்தி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குத்தாலத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை. ஏற்கனவே குத்தாலத்தில் அறையெடுத்து தங்கிவிட்டிருந்தாலும், இப்போது முக்கிய வேலையாக ஒன்றை எடுக்க மீண்டும் சிதம்பரம் வந்திருக்கிறான். அந்த ஒன்றைத்தான் கோகுலும் வேண்டாம் வேண்டாம் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் மதி அதை கேட்பதாக தெரியவில்லை. அதுதான் சைக்கிள்.
மதிக்கு சைக்கிள் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கும் ஏதோ உயிர் இருப்பதைப்போல பாவித்துக்கொள்வான். அவன் தற்போது வைத்திருக்கும் சைக்கிள் அவன் எட்டாம் வகுப்பு படிக்கும்போது வாங்கிய சைக்கிள். எட்டுவருட பழைய சைக்கிள்.
மதிக்கு சைக்கிளின் மீது இவ்வளவு ஆர்வம் வந்ததற்கு காரணம் அவன் தாத்தா தான். அவர் வைத்திருக்கும் சைக்கிள் இருபது வருடங்கள் பழமையானது. ஆனால் அது அப்படி தெரியாது. போன வாரம்தான் வாங்கியது போல இருக்கும்.
கோகுல் அவனை போக வேண்டாம் என்று சொன்னதற்கு முதல் காரணம் அவன் அந்த சைக்கிளை ஒரு பேருந்தின் மேற்கூரையிலோ அல்லது ஒரு ரயிலின் பார்சல் பெட்டியிலோ போட்டுக்கொண்டு போகவில்லை. குத்தாலம் வரை ஓட்டிச்செல்வதுதான் அவனது திட்டம்.
ஒரு நல்ல சைக்கிள் ரேசருக்கு இது அத்துப்படிதான். ஆனால் மதி இவ்வளவு பெரிய தூரம் இதுவரை சென்றதில்லை.
அதுவும் ஹைவே சாலை என்றால் சரக் சரக் என்று லாரிகளும் பேருந்துகளும் வந்துக்கொண்டிருக்கும். அதற்கு இடையில் ஒரு ஓரத்தில் சைக்கிளில் போனாலும் ஆபத்துதான். இருட்டி விடுவதற்குள் போயாக வேண்டியது இன்னொரு கட்டாயம். இப்படி அத்தனை இடர்பாடுகளையும் வைத்துக்கொண்டு மதி சைக்கிளில் போவதை கோகுல் விரும்பவில்லை.
அந்த சைக்கிளும் அப்படி ஒன்னும் கண்டிசனில் இருப்பது இல்லை. மாதம் ஒருமுறை ரிப்பேர் செய்யப்படும். சில நேரம் வாரம் ஒரு முறை.ஒரு முறை பிரேக் கட்டை, ஒரு முறை செயின், ஒரு முறை பெடல், ஒரு முறை சீட். ஆனாலும் மதி அந்த சைக்கிளை விடுவதாக இல்லை.
மதியம் இரண்டரை ஆகிக்கொண்டிருந்தது. மதி பையை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான். காலையிலேயே முழுதாக காத்தடித்து எண்ணெய்ப்போட்டு வைத்திருந்த சைக்கிளை மீண்டும் ஒருமுறை சுற்றும் முற்றும் சோதித்துப் பார்த்துக்கொண்டான். வெயில் சுளீரென்று அடித்தது. ஒரு மாதிரி வெப்பத்தோடு காற்று வீசிக்கொண்டிருந்தது. மதி சைக்கிள் பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்தான்.
-தொடரும்