வேகமாக வந்த குதிரைகள் மந்திராயினி அருகே வந்துவிட்டது. பத்து குதிரைகளுக்கு மேல் இருந்தது. அனைத்திலும் முகமூடி அணிந்தவர்கள் கருப்பு உடையுடன் அமர்ந்திருந்தனர். அனைவரின் ஒரு கையில் ஈட்டியும் இன்னொரு கையில் ஒரு வாளும் இருந்தது. அனைவரும் குதிரையை விட்டு கீழே இறங்கினார்கள், ஒருவன் மட்டும் உட்கார்ந்திருந்தான். அவன் தான் அவர்களுக்குத் தலைவனாக இருப்பான் என்று நினைத்துக்கொண்டாள் மந்திராயினி. அனைவரின் தோல் பட்டையிலும் சாளுக்கிய முத்திரை இருந்தது.
மந்திராயினி உடனே சத்தம் எழுப்பி இளவரசர் தூங்கிக் கொண்டிருந்த குதிரைக்குச் சத்தம் கொடுக்க அந்தக் குதிரை வேகமாக ஓட ஆரம்பித்தது. அந்தக் குதிரையைப் பிடிக்கும்படி அந்தத் தலைவன் கூற இரண்டு பேர் குதிரையில் ஏறி, இளவரசர் இருக்கும் குதிரையைத் துரத்திப் போக, மந்திராயினி தன் கையில் இருந்த ஒரு வாளையும் வீழ்ந்துக்கிடந்த சூரியத்தேவரின் ஒரு வாளையும் எடுத்து அவர்களை நோக்கி வீச, புரப்பட்ட இருவரும் உடல் சரிந்து கீழே விழுந்தனர்.
மற்ற அனைவரும் மந்திராயினியை சுற்றிக் கொண்டு அவளை வாளால் தாக்க ஆரம்பித்தனர். அனைத்தையும் லாவகமாகத் தடுத்த மந்திராயினி ஒரு கண்ணால் இளவரசர் குதிரை சென்ற திசையையும் பார்த்துக்கொண்டாள். அது வேகமாக இருளில் மறைந்தது. அது இந்நேரம் காட்டைவிட்டு நகர்புறத்திற்குள் சென்றிருக்கும். எப்படியாவது இளவரசர் வடவூர் கோட்டைக்குள் சென்று விடுவான் என்று நம்பினாள் மந்திராயினி. இந்தக் கயவர்கள் ஒரு கை பார்த்துவிடுவது என்று தன் வாளில் அவர்களைப் பதம் பார்த்துக்கொண்டிருந்தாள். அத்தனை பேரின் வாள்களுக்கும் தன் ஒற்றை வாளால் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஆனால் போகப் போகச் சோர்ந்துப்போக ஆரம்பித்த மந்திராயினியின் தோள், வயிறு என்று எதிரிகளின் கத்தி கிழிக்க ரத்தம் வழிந்தது. முற்றிலுமாகச் சோர்ந்துப்போய் வாளை தரையில் ஊன்றியிருந்தாள் மந்திராயினி. சண்டைப் போட்டவர்களில் இரண்டு பேர் மட்டுமே மிச்சமிருந்தார்கள். மற்ற அனைவரையும் மந்திராயினி சாய்த்திருந்தாள். சோர்ந்திருந்த மந்திராயினியின் முதுகில் ஒரு வாள் கிழித்து வயிற்றின் வழியாக வெளியே வந்தது. குதிரை மேலே உட்கார்ந்திருந்த தலைவன் கீழே இறங்கிவந்தான். முழுவதும் முகமூடி அணிந்திருந்த அவன் முகத்தில் கண்கள் மட்டும் தெரிந்தது.
மந்திராயினியின் உடலில் இருந்து உயிர் பிரிந்துக்கொண்டிருந்தது. ஆனால் அவள் மனது மகிழ்ச்சியில் இருந்தது. எப்படியும் இளவரசர் இந்நேரம் கோட்டைக்குள் சென்றிருப்பான் என்ற மகிழ்ச்சி. தன் மகனின் உயிரை காப்பாற்றி விட்டதான மகிழ்ச்சி. பல்லவ சாம்ராஜ்ஜியத்தை அழியாமல் பாதுகாத்த மகிழ்ச்சி. மந்திராயினியை சுற்றி ரத்தம் படர்ந்திருந்தது.
அந்தத் தலைவனை மந்திராயினி அருகில் வந்தான். ஆனால் அந்தக் கண்கள் அவளுக்கு எங்கோ பார்த்தது போல இருந்தது. நன்றாகப் பார்த்த கண்கள் அது. அந்தத் தலைவன் தன் முகமூடியை கழற்றினான்.
2010 – காஞ்சிபுரம்
ஐந்து வருடங்களுக்கு முன் சதீஷ் இறந்த நாள்
சதீஷ் அப்போது சென்னையில் ஒரு அகழ்வாராய்ச்சி பணியில் இருந்தான். அங்குச் சில கற்காலத்துப் பொருட்கள் கிடைத்துக்கொண்டிருந்தது. அப்படியொரு நாள் வேலையில் இருக்கும்போது அவனுக்கு அந்த ஃபோன் வந்தது.
"ஹலோ சதீஷ் ஸ்பீக்கிப்...."
"நான் ஜெயக்குமார் டா..."
"சொல்லுடா எப்படி இருக்கே..ரொம்பப் பிஸியா..."
"ஆமா சதீஷ். கொஞ்சம் வேலைதான். ஒரு முக்கியமான விஷயம். உடனே காஞ்சிபுரம் வர முடியுமா?"
"டேய்...இங்க நானும் பயங்கர வேலையில இருக்கேன்...என்னன்னு சொல்லு..."
"இது எல்லாத்த விடவும் முக்கியம் டா...ஒரு முக்கியமான கல்வெட்டு. நீ வந்து படிச்சு சொன்னா நல்லா இருக்கும்"
"சரி வரேன்..."
ஜெயக்குமார் அறையில் அந்தக் கல்வெட்டு ஒரு சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. மிகவும் சிதலமடைந்திருந்த அந்தக் கல்வெட்டு முழுச் சதுரமாக இல்லாமல் முனைகளில் வெடிப்பு விழுந்திருந்தது. நடுவில் நான்கு வரிகளில் ஏதோ எழுதியிருந்தது. பழைய தமிழ் எழுத்துக்களாக இருக்கலாம்.
சதீஷ் வந்து சேர்ந்தான். ஜெயக்குமார் அவனுக்கு அந்தக் கல்வெட்டை காட்டினான். கொஞ்சம் நேரம் அதையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு ஒரு பேப்பரை கையில் எடுத்து, அந்தக் கல்வெட்டைப் பார்த்து எழுத ஆரம்பித்தான். எழுதி முடித்துவிட்டு பெரிய பெருமூச்சுடன் ஜெயக்குமாரை பார்த்தான்.
"பல்லவ அரசுல ஒரு வழக்கம் இருந்திருக்கு...அதாவது முடிசூடுதல் நடக்கறப்போ அவுங்களுக்கு ஒரு பெரிய குடும்பத்த சேர்ந்தவங்க ஒரு தங்ககுதிரைய பரிசா கொடுப்பாங்க...ஆனா இந்தக் கல்வெட்டுல குறிப்பிடப்பட்டிருக்க மகேந்திரவர்ம பல்லவனுக்கு அப்படிக் கொடுக்கபடல...என்ன காரணம்னு தெரியல...இந்த கல்வெட்ட நீ எடுத்த இடத்துல இன்னும் ஆழமா ஒரு பட்டுத்துணியால மூடிய அரிசி நிரப்பட்ட பானைக்குள்ள அந்தத் தங்ககுதிரை சிலை இருக்குன்னு இதுல போட்டிருக்கு...
பட்டுத்துணிப்போர் த்தியஅரிசி குவியல்
கட்டுநிறைத்தமின் தங்ககுதிரை குடுவை - தொன்று
தொட்டுவரும் இக்குதிரையின் பல்லவ சூட்டல்
விட்டுப்போனதிந்த மண்ணுக்குள் மகேந்திரவர்ம பவ்லவனுடன்"
என்று அந்த வரிகளைப் படித்தும் காண்பித்தான்.
ஜெயக்குமாருக்கு அப்போதுதான் எல்லாம் புரிந்தது. தான் கண்டுபிடித்த கல்வெட்டு ஒரு தடயம் இல்லை. அது ஒரு பெரிய தடயத்திற்கான சாவி.
"இத யார் எழுதியிருப்பாங்கன்னு நினைக்கிற..."
"யாராவது புலவர்கள், அமைச்சர்கள், வீரர்கள் யாரா வேணா இருக்கலாம். நீ உடனே இன்னும் டீப்பா வேலைய ஸ்டார்ட் பண்ணு என்னோட கணிப்பு படி இது இருக்க அந்தப் பானை அங்க தான் இருக்கனும். அதும் இந்தக் கல்வெட்டு எடுத்த இடத்திற்குக் கீழேயே"
"நான் ஒன்னு சொன்னா கேட்பியா...?"
"நீ சொல்லி நான் என்னது கேட்காம போயிருக்கேன். சொல்லு..."
"நாம் இப்போவே அங்க போவோம்...அங்க போய் அந்த இடத்த தோண்டி நம்ம எடுக்கலாம்...எனக்கு இந்த ஆர்வம் தாங்கல..."
"டேய்...ஆர்வக் கோளாறு...இப்போ மணி ராத்திரி பதினொன்னு...மழை வேற வரப்போகிற மாதிரி காத்து அடிக்கும்...சும்மா இரு காலையில பாத்துக்கலாம்..."
"ப்ளீஸ் சதீஷ்...அது தங்கம் வேற...பாதுகாப்பா இருக்குமான்னு சொல்ல முடியாது...உடனே போகலாம் வா" என்று ஜெயக்குமார் சதீஷின் கையைப் பிடித்துக்கொண்டு சென்றான். அறையைப் பூட்டிவிட்டுக் காரில் ஏறி இருவரும் செல்ல மணி பனிரெண்டு ஆகிவிட்டது.

வானம் சிவந்துப்போயிருந்தது. எந்த நொடியில் வேண்டுமானாலும் மழை வந்துவிடுவதைப்போலக் காற்று வீசிக்கொண்டிருந்தது. அந்த அகழாய்வு இடத்தில் யாருமே இல்லை. அங்கங்கு குழிகள் மட்டுமே இருந்தது. ஜெயக்குமார் எந்தக் குழியில் இந்தக் கல்வெட்டை எடுத்தான் என்று கேட்டுச் சதீஷ் அந்தக் குழியினுள் மண்வெட்டியுடன் இறங்கினான். ஆள் உயர குழி சதீஷை முழுமையாகத் தனக்குள் வைத்துக்கொண்டது. ஜெயக்குமார் மேலே இருந்து டார்ச் லைட்டை பிடித்து சதீஷ் தோண்டும் இடத்திற்கு ஒளி கொடுத்துக்கொண்டிருந்தான். மழை பிடிக்க ஆரம்பித்தது. எப்படியும் தோண்டி எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர் இருவரும்.
ஒரு கட்டத்தில் மழை அதிகமானது. குடை ஏதும் இல்லாமல் இருவரும் நனைந்துப்போயினர். குழியிலும் நீர் தெங்க ஆரம்பித்துவிட்டது. இனி தோண்ட முடியாது என்று சதீஷ் மேலே வர முற்பட்டான். ஒரு பக்கம் மண்ணிலேயே அமைக்கப்பட்ட படிகட்டுகள் சரிந்திருந்ததால் குதித்து ஏறிவிடலாம் என்று முடிசெய்தான். பக்கவாட்டுச் சுவரில் கால் வைத்து மேலே நீட்டிக்கொண்டிருந்த ஜெயக்குமாரின் கையைப் பிடிக்க முடியாமல் குழிக்குள்ளேயே சறுக்கி விழுந்தான் சதீஷ்.
அப்போதுதான் எதிர்பாராமல் அது நடந்தது. குழியின் பக்கவாட்டு சுவர் மழைநீரில் சரிந்து விழுந்தது. சடசடவெனச் சரிந்த மணல் சதீஷை முழுவதுமாக மூடிக்கொண்டது. ஜெயக்குமார் என்ன செய்வது என்று தெரியாமல் கதறினான். தன் கையால் முடிந்த அளவிற்கு மண்ணை நகர்த்தியும் சதீஷ் தட்டுப்படவில்லை. நீண்ட நேரம் கையாலேயே தோண்ட சிறிது ஆழத்திற்குக் கீழ் சதீஷ் தட்டுப்பட்டான். அவன் உடல் முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. ஜெயக்குமார் அவனை அப்படியே தூக்கி வந்து கட்டிப்பிடித்து அழுதான். அப்போதுதான் தெரிந்தது அவன் உடலில் உயிர் இல்லை என்று. மூச்சுமுட்ட இறந்துப்போன சதீஷின் உடலை பிடித்துக்கொண்டு அன்று இரவு முழுவதும் அங்கேயே மழையில் உட்கார்ந்திருந்தான் ஜெயக்குமார். தன் நண்பன் மரணத்திற்குக் காரணமானது அந்தக் கல்வெட்டுதான் என்று அதை அடித்து நொறுக்கினான். பிறகு கொஞ்ச நாட்களுக்குப் பித்துப் பிடித்ததுபோல அலைந்தான். கடைசிவரை அந்தக் கல்வெட்டில் என்ன இருந்தது என்பது ஜெயக்குமார் மற்றும் சதீஷைத் தவிற யாருக்கும் தெரியாமலே போனது.
-தொடரும்
Leave your comments on the story below.

No comments:
Post a Comment