கிபி 7ஆம் நூற்றாண்டு
தங்ககுமாரர் வீட்டின் கதவு உடைந்து உள்ளே வந்த இரண்டு உருவங்களை அவர் பார்த்ததுமே அவரால் அடையாளம் சொல்ல முடிந்தது. அது மகாராணி மந்திராயினியும் இளவரசர் மகேந்திரனும் தான். இருவரும் பதற்றத்துடன் உள்ளே நுழைந்தனர். யாரோ அவர்களைப் பின் தொடர்வதுபோலப் பின்னால் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். தங்ககுமாரர் உடைந்த அந்தக் கதவை எடுத்து நிமிர்த்தி வைத்து விட்டு மகாராணி பக்கம் வந்தார்.
"வாருங்கள் மகாராணி... இந்த நேரத்தில் என்னுடைய இல்லத்திற்கு நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை அம்மா... ஏதோ பிரச்சனைபோலத் தோன்றுகிறதே..."
"ஆம் தங்ககுமாரரே பிரச்சனைதான்...பெரிய பிரச்சினை...பல்லவ சாம்ராஜ்யத்தையே அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சினை..."
"அது எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் நான் என் உயிரை கொடுத்தாவது இந்தப் பல்லவத்தைக் காப்பாற்றுவேன் அம்மா...ஆனால் அது என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் மகாராணி..."
"சொல்கிறேன் குமாரரே..." மகாராணி இளவரசரை வீட்டின் ஒரு மூலையில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் தங்ககுமாரர் அருகில் வந்து பேச ஆரம்பித்தார். அந்த நேரத்தில் முத்துக்குமாரனுக்கும் நடப்பவை யாதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தான்.
"குமாரரே நம் மன்னர் சிம்மவிஷ்ணு இயற்கையாக இறந்தார் என்றே எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களும் அண்டை நாட்டு மன்னர்களும் அதைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. மன்னர் எந்தவிதமான நோயும் பெறவில்லை. அவருக்கு எந்தவிதமான உடல் பாதிப்பும் ஏற்படவில்லை. இதில் சாளுக்கியர்களின் சதி இருக்குமோ என்று நான் கருதுகிறேன். நம்முடைய பல்லவ அரண்மனைக்குள்ளேயே சாளுக்கியர்களுக்குத் துணைப்போகக் கூடிய பெரிய சக்திகள் இயங்குகின்றது. இன்று நானும் மகேந்திரனும் என்னுடைய அறையில் பேசிக்கொண்டிருக்கும் போது சன்னல் வழியாக யாரோ ஒரு உருவம் எங்களை நோக்கி ஒரு வாளை எடுத்துக்கொண்டு வந்தது. அந்த ஆள் யாரென்று தெரியவில்லை. அவனுடன் போராடிதான் இப்போது தப்பித்து வந்துள்ளோம். எங்களை அந்த உருவம் பின் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது. எங்களுக்கு யாரை நம்புவது நம்பக் கூடாது என்று தெரியவில்லை. விடிந்தால் நடக்கவிருக்கும் முடிசூட்டுதல் நடக்கவிடாமல் இன்று இரவே என்னையும் இளவரசரையும் கொன்று விடுவதற்காகத்தான் இதுவெல்லாம் நடக்கிறது போல...."
"பயப்படாதீர்கள் மகாராணி...இது பாதுகாப்பான இடம் தான். நான் உடனடியாகச் சென்று மருதையப்பருக்கும் சூரியத்தேவருக்கும் இந்தத் தகவல்களைச் சொல்லிவிட்டு வருகிறேன்..."
"வேண்டாம் தங்ககுமாரரே...அவர்கள் இருவரில் யாரோ ஒருவர்தான் இந்தச் சதி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் அவர்களிடம் செல்வது நாமே நம்மைக் காட்டி கொடுப்பதுபோல ஆகிவிடும்...எனக்கு ஒரு உதவி செய்யங்கள்..."
"சொல்லுங்கள் மகாராணி"
"எனக்கு ஒரு குதிரை கொடுங்கள். நான் இளவரசரை அழைத்துக்கொண்டு வடவூர் சிற்றரசர் என் சகோதரர் ஆதிவல்லவனிடம் சென்றுவிடுகிறேன். சிறிதுகாலம் அங்குப் பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு இந்த உதவி மட்டும் செய்யுங்கள் குமாரரே"
"மகாராணி இது உதவி இல்லை. என் பாக்கியம். என்னிடம் இரண்டு குதிரைகள் இருக்கிறது. உங்களை வடவூர் வரை பாதுகாப்பாக வந்து விட்டுவிட்டு வருகிறேன். எனக்குத் தங்கள் கூடவே வர அனுமதி தாருங்கள் மகாராணி..."
"இல்லை குமாரரே. நீங்கள் இங்கு இருக்க வேண்டும். ராஜ்ஜியத்தில் மறைந்துள்ள அந்தச் சூழ்ச்சிக்காரன் யார் என்று நீங்கள் கண்டுப்பிடிக்க வேண்டும். மீண்டும் பல்லவ சாம்ராஜ்யம் அமைவதற்காக நீங்கள் காஞ்சி நகரிலேயே இருக்க வேண்டும்..."
"உத்தரவு மகாராணி. ஆனால் தங்களின் இந்தப் பயணம் உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்..."
"ஆபத்துகளைப் பார்த்தவள் நான். என்னால் சமாளிக்க முடியும். ஒருவேளை என்னுடைய உயிர் போனாலும் நீங்கள் இளவரசரை யாருக்கும் தெரியாத இடத்தில் வளர்த்து அவரை மீண்டும் இந்தப் பல்லவத்தின் மன்னராக்க வேண்டும்"
"கண்டிப்பாக மகாராணி. நாம் விரைந்து செயல்பட வேண்டும். வாருங்கள்..." என்று மகாராணியையும் இளவரசரையும் தன் வீட்டிற்குப் பின் பக்கம் இருக்கும் குதிரை லாடத்திற்கு அழைத்துக்கொண்டு போன தங்ககுமாரர் அதில் ஒரு குதிரையைத் தயார் செய்தார். கருப்பு கம்பளி ஒன்றை மகாராணியிடம் கொடுத்து அவரைப் போர்த்திய படி போகச்சொன்னார். இளவரசருக்காகத் தான் செய்த தங்ககுதிரை கொண்ட பானையைக் குதிரையின் முதுகில் கட்டினார்.
இளவரசர் முன்னும் மகாராணி பின்னும் அமர அந்தக் குதிரை வேகமாகத் தங்ககுமாரர் இல்லத்திலிருந்து கிளம்ப இருட்டில் மறைந்தது.

1996 - காஞ்சிபுரம்
ஜெயக்குமாரும் சதீஷும் அப்போது காஞ்சிப்புரத்தில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தனர். இருவர் வீடும் ஒரே தெருவில் இருந்தது. சிறு வயது முதலே இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். விடுமுறை நாட்களில் ஏதாவது காட்டுப்பகுதிகளுக்குள் சுற்றித் திரிவார்கள். ஜெயக்குமாரின் அப்பா அவன் படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியராக இருந்த காரணத்தால் அவரிடம் கேட்டு படிப்பதற்காக சதீஷ் மாலை நேரங்களில் ஜெயக்குமாரின் வீட்டிலேயே இருப்பான். ஒரு விடுமுறை நாளில் மதிய வெயிலில் இருவரும் ஒரு கருவேல மரங்கள் சூழ்ந்த பகுதிகளுக்குள் சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது தான் அவர்களுக்கு அந்தக் கோயில் தென்பட்டது. பெரிய மரக்கிளைகளும் புதர்களும் மண்டிக்கிடக்கச் சிதலமடைந்த அந்தக் கோவில் அவர்களுக்குத் தெரிந்தது. பார்ப்பதற்கு ஏதோ பேய் வீடு மாதிரி இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். அந்தக் கோவிலை பற்றி ஊருக்குள் பல பேச்சுகள் இருக்கின்றன. யாரோ பழைய ராணி ஒருத்தி இந்த இடத்தில் இறந்துப்போனதாகவும் அவளின் ஆவி அந்தக் கோயிலை சுற்றுவதாகவும் பல பேச்சுக்கள் இருந்தன.

ஜெயக்குமாரும் சதீஷும் அந்தக் கோயிலில் உடைந்துப்போன படிகளில் கால் வைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் உள்ளே செல்வதற்குத் தாறுமாறாக வளர்ந்திருந்த மரக்கிளைகள் தடையாக இருந்தது. பல இடங்களில் மேற்கூரை இடிந்து விழுந்து வானம் தெரிந்தது. சுவறுகளில் ஏதோ எழுதியது போல இருந்தது. ஜெயக்குமாரும் சதீஷும் அதைப் படிக்க முயன்றுக்கொண்டிருந்தனர். அப்போது உள்ளே கருவறைப்போன்ற அறையில் யாரோ நடப்பதுபோல ஒரு சத்தம் கேட்டது. இருவரும் பயந்துப்போயினர். சதீஷ் ஜெயக்குமாரின் கையைப் பிடித்துக்கொண்டு போய்விடலாம் என்றான். ஆனால் ஜெயக்குமாருக்குப் போவதற்குத் தோணவில்லை. உள்ளே யாரும் இல்லை என்று சதீஷை அமைதிப்படுத்திவிட்டு, இருவரும் அந்ந கருவறைக்குள் நுழைந்தனர். உள்ளே சிதைந்துப்போன ஒரு பெண்ணின் சிலையிருந்தது. ஒரு ஆளின் உயரத்திற்கு இருந்த அந்தச் சிலை வேறு எங்கோ இருந்து பெயர்த்து எடுத்து வந்து சுவறில் சாய்த்து வைத்ததுபோல இருந்தது. அந்தப் பெண் கையில் ஒரு வாளுடன் முதுகில் ஒரு சிறுவனைச் சுமந்துக்கொண்டு இருந்தாள். அவளின் கண்களில் இருக்கும் கோவம் பார்ப்பதற்கே இருவருக்கும் பயமாக இருந்தது.
நேரம் ஆக ஆக அந்தச் சிலைக்கு ஏதோ உயிர் வந்துவிட்டது போலத் தோன்றியது இருவருக்கும். அந்தக் கோவமான பார்வை இவர்களைப் பார்த்து இருப்பதுபோலத் தோன்றியது. மேலும் யாரோ அங்குமிங்கும் நடப்பது போலத் தோன்றியது இருவருக்கும். இருவரும் கையைப் பிடித்துக்கொண்டு ஓரே ஓட்டமாக அந்தக் கோயிலை விட்டு ஓடினர். இதைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று பேசி வைத்துக்கொண்டனர்.
அடுத்த நாள் இரண்டு பேரும் சந்தித்துக் கொண்டபோது அந்தப் பெண் கனவில் வந்ததாக இருவரும் கூறினர். மீண்டும் அந்தக் கோவிலுக்குப் போய் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்துவிடலாமா என்று எல்லாம் முடிவு செய்தனர். ஆனால் போகவில்லை. நாட்கள் கடந்தது. இருவரும் ஒன்றாகப் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அகழ்வாராய்ச்சி படிப்பதற்காகக் கல்லூரியில் சேர்ந்தார்கள். இருவருக்கும் இதுபோல ஊர் சுற்றுவது எந்த இடத்தையாவது ஆராய்வதில் உள்ள ஆர்வம் அவர்களை அகழ்வாய்வில் கொண்டு போய் விட்டது. அகழ்வாராய்ச்சி கல்லூரி முடித்துவிட்டு இருவரும் வேறு வேறு இடங்களில் பணியில் சேர்ந்தார்கள். ஆனாலும் அவ்வப்போது ஒன்றாகச் சந்தித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் ஆராய்ச்சி செய்துக்கொண்டும் இருந்தனர். அகழ்வாராய்ச்சி அவர்கள் வாழ்வில் ஒரு பகுதியானது. எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது அந்த ஒருநாள் வரும் வரை...
-தொடரும்...
Leave your comments on the story below.

விறுவிறு
ReplyDelete