லேசாக மயக்கம் வருவது போல இருந்தது. மதியம் குடித்த கரும்பு ஜூஸ் எப்படியும் இன்னேரம் செரித்து இருக்கும். தொடர்ந்து கால்கள் சுழன்றுக்கொண்டே இருந்ததால் தொடைகள் வலித்தது. முதுகெலும்பில் அதைவிட வலி அதிகம். பாதி தூரம்தான் கடந்து இருப்பதாய் கூகுள் மேப்ஸ் காட்டியது. சூரியன் மெதுவாக மறையத்தொடங்கி இருந்தது. மணி ஐந்து ஆகிக்கொண்டிருந்தது. சில தெருக்களில் புது ஆள் என்று முறைப்பார்கள். நாய்கள் குரைக்கும். வலித்த கால்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று நினைத்தபோதுதான் அந்த கூட்டம் அங்கு இருந்தது. ரோட்டின் மேல் இருந்த வீட்டின்முன்தான் கூட்டம். ரோட்டுக்கும் சேர்த்து பந்தல் போட்டு இருந்தார்கள். வெளிய கிடந்த நாற்காலிகள் பத்தாமல் பாதிபேர் நின்றுக்கொண்டிருந்தனர். யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டின் பக்கவாட்டில் ஒரு நான்குபேர் பாடையைத் தயார் செய்துக்கொண்டிருந்தார்கள். இழவு வீடுபோல.
மதி சைக்கிளில் நெருங்கியும் கூட்டம் விலகவில்லை. யாரும் கண்டுக்கொள்ளவும் இல்லை. உள்ளே அழுகை சத்தம் ஓய்ந்துப்போயிருந்தது. சிலர் மட்டுமே தேம்பும் சத்தம் கேட்டது. ஒரு மூலையில் தாரைகள் நெருப்பில் சுட்டுக்கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் பெரிய ஆயிரம் வாலாவை விரித்தான். அவன் வெடி வைப்பதற்குமுன் அந்த இடத்தை கடந்து விடவேண்டும் என்று தோன்றியது. லேசாக பெல் அடித்தான். கூட்டத்தில் யாரோ ஒருவன் பார்த்துவிட்டான்.
'ஏம்பா நகருங்க...ஆளு போவுது வழிவிடுங்க' என்று யாரோ கத்த கூட்டம் விலகியது. மதி சைக்கிளை நுழைத்துக்கொண்டு அந்தப்பக்கம் வெளியே வந்தான். கொஞ்சம் தூரம் கடந்த பின் தாரை சத்தமும் வெடி சத்தமும் கேட்டது. சூரியன் முழுமையாக மூழ்கிப்போயிருந்தது. ஆனால் வெளிச்சமிருந்தது.
கொஞ்சம் தூரம் கடந்ததும் ஒரு சின்ன பெட்டிக்கடை வந்தது. உடல்வலியை போக்கிக்கொள்ள ஒரு கலர் வாங்கிக்குடித்தான். கீழே உட்கார முடியாமல் முட்டி வலித்தது. பேசாமல் பேருந்திலோ ரயிலிலோ வந்து இருக்கலாம் என்று தோன்றியது. இனிமேல் பின்னாடியும் போக முடியாது. நடக்கிறது நடக்கட்டும் என்று வலியை பொறுத்துக்கொண்டு சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தான்.
இரண்டு பக்கமும் வயல்வெளிகள். மாலை பள்ளி முடித்து வீட்டுக்கு செல்லும் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அவர்களை பார்த்துக்கொண்டே சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான்.
அதுவும் ஒரு பள்ளி விடும் நேரம்தான். அப்போது மதி பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். பத்தாம் வகுப்பு என்பதால் வகுப்பு முடிய ஆறுமணி ஆகிவிடும். மதியின் நண்பன் விஜய் அப்போது டி.வி.எஸ் வண்டியில் வருவான். அப்போது அது பிரபலம். மதிக்கு அந்த வண்டி ஓட்ட தெரியாவிட்டாலும் விஜய் கூட பின்னால் அமர்ந்து வீட்டுக்கு போவான். அன்று ஏதோ மதிக்கு அவன் ஓட்ட வேண்டும் என்று தோன்றியது. விஜயும் ஒப்புக்கொண்டான். வண்டி கிளம்பியது. முதலில் சற்று தடுமாறினாலும் மதி நன்றாகவே ஓட்டினான். ஒரு வீட்டை கடக்கையில் ஒரு கிளி சக்கரத்தின் உயரத்திலேயே பறந்துவந்து சக்கரத்தில் சிக்கியது. இரண்டு சக்கரத்திலும் நசுங்கியது. மதி பிரேக் பிடிப்பதற்குள் இதுவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது. வண்டியை நிறுத்திவிட்டு வந்து பார்க்கும் போது அந்த கிளி ரத்த வெள்ளத்தில் அடித்துக்கொண்டிருந்தது. அந்த வீட்டிலிருந்து ஒரு அம்மாவும் அவள் மகளும் வெளியே வந்து துடித்துக்கொண்டிருக்கும் கிளியை பார்த்து கதறி அழுதனர். தெருவே கூடிவிட்டது. யாரும் மதியை திட்டவில்லை. அவன் மீது தப்பு இல்லை என்று தெரிந்தது. எல்லோரும் மதியையும் விஜயையும் போக சொன்னார். இருவரும் உடனடியா சென்று ஒரு மருந்துக்கடையில் கட்டும் மருந்தும் வாங்கிக்கொண்டு வரும்பொது கிளி இறந்துப்போயிருந்தது. அந்த அம்மா பிணமான கிளியை கையில் வைத்துக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தாள். அதுதான் மதி சந்தித்த பெரிய இழவு. அன்று இரவு மதி சாப்பிடவும் இல்லை. தூங்கவும் இல்லை. ஒரு மாதத்திற்கு மேல் மதியால் அதை மறக்க முடியவில்லை.
இருட்டத் தொடங்கிவிட்டது. வழி கிராமங்களை விடுத்து ஒதுக்குப்புறமாக ஒரு சாலையில் புகுந்தது. சுத்தமாக வெளிச்சமில்லை.
-தொடரும்

No comments:
Post a Comment